செவிலியர்கள் முன் நிர்வாண கோலம்..! ஆபாச செய்கை..! டெல்லி தப்லிக் ஜமாத்தார்கள் ஹாஸ்பிடலில் அநாகரீகம்! கொரோனா சோதனைக்கு ஒத்துழைக்க மறுப்பு!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் செவிலியர்களுடன் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 10,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நம் நாடு முழுவதிலும் சமூக விலகலை கட்டாயமாக்குவதற்காக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சமூக விலகல் தான் இந்த நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான ஒரே வழி என்பதை உணர்ந்ததால் இந்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சென்ற மாதம் 15-ம் தேதியன்று டெல்லியிலுள்ள நிஜாமுதீன் என்ற இடத்தில் அமைந்துள்ள நிஜாமுதீன் மர்காஸ் மசூதியில் தப்லீகி ஜமாத் என்ற அமைப்பினர் இஸ்லாமிய மத குருக்கள் ஒன்று சேரும் கான்ஃபரன்ஸ் ஒன்றை நடத்தினர்.

இதில் இந்திய நாட்டின் பல்வேறு திசைகளிலிருந்தும் இஸ்லாமிய பெரியவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து பல்வேறு இஸ்லாமிய பெரியவர்களும் கலந்து கொண்டனர். இந்த மதக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டத்தில் பங்கேற்ற பலரும் தங்களுடைய சொந்த மாநிலங்களிலுள்ள சுகாதார மையத்தை தொடர்பு கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பலரும் அதே பகுதியில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, அவர்களை எம்.எம்.ஜி  மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டுகளில் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டுகள் என்பதால் சிலர் செவிலியர்களிடம் தகாத வகையில் ஈடுபட்டு வந்துள்ளனர். செவிலியர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியும், அவர்களின் முன் ஆடையின்றி நிர்வாணமாக நடந்து வருவது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ நிர்வாகம் இதனை காவல்துறையின் கவனத்திற்கு எடுத்து சென்றனர். உடனடியாக காவல்துறையினர் அநாகரீகமாக நடந்துகொண்ட 6 பேர் மீது ஃஎப்.ஐ.ஆர் பதிவு செய்து அவர்களை வேறு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.