திருமணத்திற்கு பிறகு அப்படிப்பட்ட ஆடைகளை நான் அணியக் கூடாதா? சமந்தா கேட்ட கேள்வி!

சென்னை: ''திருமணம் ஆகிவிட்டதால், சுதந்திரமாக ஆடை அணியக்கூடாதா?'' என்று நடிகை சமந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் சமந்தா கடந்த ஆண்டு, நாகார்ஜூனா மகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாலும் அவ்வப்போது திடீர் சர்ச்சைகள், இவர்களை சுற்றி எழுவது வாடிக்கையாக உள்ளது.   குறிப்பாக, சமந்தா ஆடை அணியும் விதம் மிகவும் கேள்விக்குரியதாக உள்ளதென்று சிலர் சமூக வலைதளங்களில் தகவல் பகிர, அது அவரது காதுக்குச் சென்றுள்ளது. இதுபற்றி பேட்டி ஒன்றில்  சமந்தா வெளுத்துக்கட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், ''நான் ஆடை அணியும் முறை பற்றி பலரும் விமர்சிக்கிறார்கள். ஏன்? திருமணம் ஆகிவிட்டால் நான் இப்படி இருக்கக்கூடாதா? திருமணத்திற்குப் பின் நான் எப்படி  உடை அணிகிறேன் என்பதை வைத்துச் சிலர் தகவல் பரப்புவதை வேலையாகச் செய்கின்றனர். ஏன் என்னைப் போன்ற பெண்கள் திருமணம் ஆனபிறகு மாடர்ன் உடைகளை அணியக்கூடாதா? எங்களுக்கு ஆடை சுதந்திரம் இல்லையா?,'' என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.