ஆண்களைவிட பெண்களுக்கு பண்டைய தமிழகத்தில் ஏராளமான விளையாட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதில் ஒன்றுதான் தட்டாங்கல்.
தமிழர் விளையாட்டான தட்டாங்கல் விளையாடத் தெரியுமா?
பெண்கள் சிறு கற்களை வைத்து விளையாடுவது தட்டாங்கல். மூன்று அல்லது ஐந்து கற்களைக் கொண்டு விளையாடப்படும். கற்களில் ஒன்றை மட்டும் கீழே வைத்து மற்றவை கையில் இருக்கவேண்டும்.
ஒரு கல்லை மேலே எறிந்து, அது கீழே வருவதற்குள் கைகளில் இருக்கும் கல்லில் ஒன்றை கீழே வைக்கவேண்டும். மேலே போன கல் கீழே வரும்போது அத்துடன் கீழே இருக்கும் கல்லையும் சேர்த்து எடுக்கவேண்டும். இதுபோன்று ஒரு கல், இரண்டு கல் மூன்று கல் என்று எடுக்க முயல்வேண்டும். இதேபோன்று தொடர்ந்து 10 முதல் 12 தடவை கற்களைத் தவறவிடாமல் பிடிக்கவேண்டும். ஒவ்வொரு கல் வீசும்போதும் பாடல் பாடுவது வழக்கத்தில் உண்டு..
ஒன்றாவது ஒன்றாங்காய், இரண்டாவது இரத்தினக்கிளி, மூன்றாவது முத்துச்சரம் நாலாவது நாற்காலி என்ற ரீதியில் எதுகை மோனையுடன் சுவையாக எதையாவது பாடலாம். ஒருவர் கல்லை தவறவிட்டால், அடுத்தவர் விளையாடத் தொடங்கவேண்டும்.