ஒரே இரவு..! நடிகையை கழட்டிவிட்டு கம்பி நீட்டிய இயக்குனர்..! விடாம தூது அனுப்பும் நடிகை! கோடம்பாக்கம் கிசுகிசு!

தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபல சர்ச்சைக்குரிய நடிகை பிரபல இயக்குனரை துரத்தி துரத்தி விடாமல் தூது அனுப்பிய வண்ணம் இருப்பதால் சினிமா வட்டாரம் பரபரப்பை சந்தித்துள்ளது.


இந்த சர்ச்சைக்குரிய நடிகையின் பெயரை கேட்டாலே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் சற்று அதிர்ச்சி அடைவர். காரணம் சமூக வலைத்தளத்தில் இவர் பதிவிட்டு வரும் பதிவுகள் தான். எப்பொழுதுமே பிரபலங்களை குறிவைத்து பதிவிட்டு வரும் நடிகை தற்போது மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

சமீபகாலமாகவே சர்ச்சைகள் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய சர்ச்சைகள் உடன் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொரோனாவைவிட நீங்கள் தான் என்னை அதிகம் பாதிக்கிறீர்கள் என பிரபல இயக்குனரை குறிப்பிட்டு அந்த சர்ச்சை நடிகை பதிவிட்டிருந்தார். 

இந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய பதிவை வெளியீட்டு சினிமா வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார். அதாவது அந்த இயக்குனரை குறிப்பிட்டு நீங்கள் என் மடியில் படுத்து என்னை மானே தேனே என்று வர்ணித்ததை என்னால் மறக்க முடியாது என கூறியிருக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் அதனை தன்னுடைய பாக்கியமாக கருதியதாகவும் நடிகை கூறியிருக்கிறார். நடிகையின் இந்த பதிவுகள் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.