பாஸ்! என்ன பண்றீங்க! கடைசி ஓவரில் இப்படியா ஆடுவீங்க? பிரபல கிரிக்கெட் வீரரை பார்த்து கேட்ட ட்ராவிட்! யாரை தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளூர் போட்டிகளின் போது நடந்த சம்பவம் பற்றி மனம் திறந்துள்ளார்.


தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நான்காவது வீரராக நிலையான இடத்தை பெற்று பேட்டிங்கில் கலக்கி வருபவர் ஸ்ரேயாஸ் அய்யர் ஆவார். இவர் சமீபத்தில் சில வருடங்களுக்கு முன்பு உள்ளூர் போட்டிகளில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைப் பற்றி மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியில் இடம் கிடைப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற உள்ளூர் டெஸ்ட் போட்டியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிடின் முன்னிலையில் நான் விளையாடினேன். அப்போதுதான் அவர் முதன் முதலில் நான் விளையாடுவதை பார்த்தார். அந்த போட்டியில் நான் 30 ரன்கள் எடுத்து ஆடி வந்தேன். அந்த நாளின் கடைசி ஓவர் அதுதான். அனைவரும் எப்படியாவது அந்த ஓவரை நான் தடுப்பாட்டம் ஆடி சமாளித்து விடுவேன் என்று எண்ணினார்கள். ஆனால் நான் அவர்களின் எண்ணத்திற்கு மாறாக அந்தநாளின் கடைசி ஓவர் கூட என்று பாராமல் பந்தை சிக்சருக்கு விரட்டினேன். 

டிரஸ்ஸிங் ரூமில் இருந்த அனைவரும் வெளியே வந்து வந்து கேட்ச் ஆகுமா அல்லது சிக்சருக்கு போகுமா என்று அச்சத்தோடு பார்த்தனர். முடிவில் பந்து சிக்சருக்கு போனது. கடைசி ஓவரில் யாராவது இப்படி விளையாடுவார்களா என்று ஆச்சரியமாக பார்த்தனர்.பின்பு ஆட்டம் முடிந்தவுடன் டிராவிட் என்னிடம் வந்து என்ன பாஸ்? நீங்க என்ன பண்றிங்க? நாளின் கடைசி ஓவரில் இப்படியா ஆடுவீர்கள் என்பதுபோல கூறினார். அதன்பிறகு டிராவிட் என்னிடம் என்ன சொல்ல வந்தார் என்பதை புரிந்து கொண்டேன். 

டிராவிட்டின் அறிவுரைக்கு பின்னரே ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை கைவிட்டு சிந்தித்து நிதானமாக ஆடும் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.