அடுப்பு பற்றவைக்கவே வக்கில்லாத மக்களை விளக்கேற்றச் சொன்னால் எப்படி? விஜயின் மாஸ்டர் பட பிரபலம் கொதிப்பு! யார் தெரியுமா?

ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் அடுப்பு பத்தவைக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளபோது, விளக்கு ஏற்றவேண்டும் என பிரதமர் கூறியிருப்பது பயமாக இருப்பதாக இயக்குநர் ரத்னகுமார் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


கொரனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலகமே போராடி வரும் நிலையில் இந்தியாவிலும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் மார்ச் 22ம் தேதி சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதுபோலவே பொதுமக்களும் கடைப்பிடித்திருந்தனர். ஊரடங்கு முடியும் அன்று பொதுமக்கள் வீட்டு வாசலில் நின்று மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கை தட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதன்போலவே மக்களும் கைதட்டி உற்சாகம் அளித்தனர். இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரமர் மோடி அறிவித்து நாடெங்கும் ஊரடங்கால் ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி வீடியோ மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு , அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த அறிப்பை குறிப்பிட்டு தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் ரத்னகுமார் "அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார். இயக்குநர் ரத்னகுமார் 'மேயாத மான்', 'ஆடை' படங்களை இயக்கியவர். விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் பணிபுரிந்தவர். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.