உலகில் கொரோனா எட்டிக் கூட பார்க்காத நாடுகள்..! அட இந்த நாடும் உள்ளதா? ஏன் தெரியுமா?

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக அளவில் பல்வேறு நாடுகளில் பரவ ஆரம்பித்து கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.


 இந்த கொரோனா வைரஸ் தொற்று மனிதனிடம் இருந்து மனிதர்களுக்கு வேகமாக பரவுவதன் மூலமாக தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் இது வரைக்கும் 8 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

எனினும் ஒரு சில நாடுகளில் 

கொரோனா வைரஸ் தொற்று இதுவரை யாருக்குமே இல்லை என்ற ஆச்சரியமூட்டும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட டோங்கா என்ற நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூட இல்லை என்ற ஆச்சரியமூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல வடக்கு பசிபிக் கடல் பகுதியில் 18,000 பேரைக் கொண்ட பலாவ் மொழி பேசும் பல வகையில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மார்சல் தீவுகள் சாலமன் தீவுகள் மைக்ரோனேசியா ஆகிய நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றின் பிடியிலிருந்து தப்பி உள்ளன. அதேபோல அண்டார்ட்டிக்கா கண்டமும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப் படவில்லை . இது போன்ற நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் அதிகளவில் உள்ளதால்தான் கொரோனா வைரஸ் தொற்று இதுவரை பரவ முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.