இந்திய அணி சொதப்பலான பேட்டிங்! பந்துவீச்சில் மாஸ் காட்டிய நியூசிலாந்து அணி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தேர்வு செய்தனர்.

முதலில் பேட் செய்த இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்தனர். இந்திய அணியின் அனுமன் விஹாரி அதிகபட்சமாக 55 ரன்களை எடுத்தார். பிரித்வி ஷா மற்றும் புஜாரா 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை ஆட்டநேர முடிவில் எடுத்திருந்தது. அந்த அணியில் லதாம் 27 ரன்களுடனும், பிளன்டல் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.