குழந்தையை பிரசவித்த மனைவி..! பச்சிளம் குழந்தை! இரவு முழுவதும் பேருந்து நிலையத்தில் தவித்த கணவன்! திருப்பூர் அதிர்ச்சி!

திருப்பூர் மாவட்டத்தில் மனைவிக்கு பிரசவம் ஆகி நான்கு நாட்கள் ஆன நிலையில் கூலித் தொழிலாளி மற்றும் அவரது மூன்று மகன்கள் ஆகிய அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு பேருந்து நிலையத்திலேயே தங்கியிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இடையன்காட்டுவலசு என்ற கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு வயது 42. இந்தப் பகுதியில் கொடி தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர் தமிழரசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தமிழரசி மூன்றாவது முறையாக மீண்டும் கர்ப்பம் தரித்து இருக்கிறார். கர்ப்பிணிப் பெண்ணான தமிழரசி பிரசவத்திற்காக கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தமிழரசிக்கு நல்ல முறையில் பிரசவம் ஆனது.

பிரசவம் ஆகி நான்கு நாட்கள் ஆன நிலையில் மருத்துவமனையில் இருந்து அவர் நேற்றைய முன்தினம் இரவு வேளையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் . நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் துரைசாமியால் தன்னுடைய மனைவி தமிழரசியை வீட்டிற்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் வீட்டிற்கு செல்ல முடியாது என்பதால் துரைசாமி காங்கேயம் அருகில் உள்ள தன்னுடைய தங்கையின் வீட்டிற்கு செல்லலாம் என்று முடிவு செய்திருக்கிறார். மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் துரைசாமி தங்கையின் வீட்டிற்கு ஆயிரம் ரூபாய்க்கு வண்டி பேசி சென்றிருக்கிறார். அப்போது அவரது தங்கையின் வீட்டு உரிமையாளர் பொருளாக தொற்று அச்சத்தால் இவர்கள் யாரையும் வீட்டில் தங்க அனுமதிக்க மறுத்து இருக்கிறார்.

இதனை அடுத்து கையில் பணம் இல்லாமல் எங்கு செல்வது என தெரியாமல் குடும்பத்தோடு துரைசாமி அவதிப் பட்டிருக்கிறார். பின்னர் துரைசாமி தன்னுடைய மூன்று குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோருடன் படியூர் பேருந்து நிலையத்தில் தங்கி இருந்திருக்கிறார். விடிந்த பின்பு மனைவி குழந்தைகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு நடந்தே சென்று இருக்கின்றனர்.

அதிஷ்டவசமாக வழியில் செல்லும் பொழுது காங்கேயம் அருகில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் கண்களில் இவர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை அழைத்து பேசும் பொழுது இவர்களின் கஷ்டத்தை அவர்கள் புரிந்து கொண்டனர். துரைசாமியின் குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான உணவுகளை தந்து அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவி புரிந்திருக்கின்றனர்.

மேலும் இவர்களை குறித்து காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டுபோய் சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.