அண்ணன் மனைவியுடன் தனிமையில் இருந்த கொழுந்தன்! அதை நேரில் பார்த்த 2 குழந்தைகள்! அவர்களுக்கு சித்தப்பாவால் ஏற்பட்ட விபரீதம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணியுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த 2 சிறுவர்களை தண்ணீரில் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அயன்பொம்மையா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஜோதி முத்து என்பவர் வசித்துவருகிறார். ஜோதிமுத்துவிற்கு உஷாராணி மற்றும் மகாலட்சுமி ஆகிய இரண்டு மனைவிகள் உள்ளனர். மகாலட்சுமி என்பவர் உஷாராணியின் உடன் பிறந்த தங்கை ஆவார்.

ஜோதிமுத்து மற்றும் உஷாராணி தம்பதியினருக்கு சீமான் அல்போன்ஸ் மைக்கிள் (வயது 14) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். அதேப்போல் ஜோதிமுத்து மற்றும் மகாலட்சுமி தம்பதியினருக்கு எட்வின் ஜோசப் என்ற 9 வயது மகன் உள்ளார். மேலும் ஜோதிமுத்துவிற்கு ரத்தின ராஜ் (வயது 37) என்ற தம்பியும் உள்ளார்.

ரத்தினராஜ் தன்னுடைய அண்ணன் மகன்கள் இருவரையும் அருகில் இருந்த கிணற்றில் பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறார். வீட்டை விட்டு சென்ற அவர்கள் வீடு திரும்பாததால் வீட்டில் உள்ள அனைவரும் சந்தேகப்பட்டு கிணற்றடியில் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு கிணற்றுக்கு அருகில் சிறுவர்கள் இருவரது காலணிகள் சட்டை ஆகியவை கிடைத்துள்ளன.

ஆனால் சிறுவர்கள் இருவரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரையும் தேடி பிரிந்துள்ளனர். பின்னர் தீயணைப்பு படையினரின் உதவியுடன் கிணற்றில் இருந்து சடலமாக 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு உள்ளனர்.

இதனையடுத்து தலைமறைவாக இருந்து வந்த இரத்தினராஜை அனைவரும் தேடியுள்ளனர். இந்நிலையில் ரத்தினராஜ் கிராம நிர்வாக தலைவரிடம் சரணடைந்து இருக்கிறார். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

அவரை விசாரித்தபோது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது ரத்தினராஜ் தன்னுடைய அண்ணியின் தங்கை மகாலட்சுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மாகாலட்சுமி அவர்களது வீட்டிற்கு அடிக்கடி வருவதன் மூலம் இவர்களுக்கு இடையில் உள்ள பழக்கம் அதிகரித்துள்ளது.

பின்னர் மகாலட்சுமியை ரத்தினராஜ் தன்னுடன் கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதனைப் பற்றி அறிந்துகொண்ட ஜோதிமுத்து கோவையில் இருந்த மகாலட்சுமி மற்றும் அவரது தம்பி இரத்தினராஜை கையோடு அழைத்து வந்துள்ளார். மேலும் அவர்கள் இருவரையும் எச்சரித்து இதற்கு பின்பு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பேசாமல் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

பின்னர் ஜோதிமுத்து மகாலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதேவேளையில் தன்னுடைய தம்பிக்கு வேறொரு இடத்தில் பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து இருக்கிறார். இருப்பினும் ரத்தினராஜ் மற்றும் மகாலட்சுமியின் பழக்கம் அதே நிலையில் இருந்து வந்துள்ளது. 

வீட்டில் யாரும் இல்லாத பொழுது மகாலட்சுமியும் ரத்தினராஜும் உல்லாசமாக இருப்பதை தங்களுடைய வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படியாக உல்லாசமாக இருக்கும் பொழுது ஜோதி முத்துவின் இரண்டு மகன்கள் இவ்விருவரையும் பார்த்துள்ளனர். இதனைப் பார்த்த அவர்கள் இருவரும் வீட்டில் உள்ள அனைவரிடமும் நடந்தவற்றை கூறி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமுத்து இவர்களை கண்டித்து இருக்கிறார். இதனையடுத்து ரத்தின ராஜின் மனைவி வீட்டை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இன்னிலையில் நாங்கள் உல்லாசமாக இருந்ததைப் பற்றி வெளியே கூறிய சிறுவர்கள் இருவரையும் கொலை செய்ய வேண்டும் என ரத்தினராஜ் திட்டமிட்டிருக்கிறார்.

அந்நேரத்தில் குளிப்பதற்காக இருவரையும் கிணற்று பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறார் ரத்தினராஜ். சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த அவர் இருவரையும் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறார். கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த அவர் தனக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக தானாக முன்வந்து கிராமநிர்வாக தலைவரிடம் சரண் அடைந்திருக்கிறார்.

பின்னர் அந்த தலைவர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து பின்னர் அவர்கள் இரத்தினராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.