நீங்க நல்லா இருக்கணும்..! பல நாட்கள் உணவின்றி தவித்த முதியவர் ! அமைச்சரின் நெகிழ்ச்சி செயல் !! என்னாச்சு தெரியுமா?

சென்னையில் பிச்சை கேட்கக்கூட ஆள் நடமாட்டம் இல்லாமல் உணவில்லாமல் தவித்த முதியவருக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உணவு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அவருக்கு தற்போது சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


உலகமே ஆட்டிப்படைக்கும் கொரனா பாதிப்பால் கிட்டத்தட்ட 192 நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து நாடுகளும், மாநிலங்களும், மாவட்டங்களும் தன்னைத்தானே அடைத்துக் கொண்டுள்ளன. அதற்குக் காரணம் இந்த நோய் மற்றவர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காகத்தான். இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விமானம் முதல் இருசக்கர வாகனம் வரை செல்லாமல் முடங்கி உள்ளது. சாலையிலும் ஆள்நடமாட்டமும் இல்லை.

ஆதரவற்றவர்களும் பிச்சைக்காரர்களும் சாலையில் செல்பவர்களை நம்பித்தான் தினமும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஊரடங்கு உத்தரவால் யாருமே வெளியில் தலைக்காட்ட முடியாத நிலையில் ஆதரவற்ற முதியவர்கள், பிச்சைக்காரர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதற்கிடையே அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் துறைமுகம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மண்ணடி அருகே கிளைவ் பேக்டரி என்ற இடத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க திருநாவுக்கரசர் என்ற முதியவர் உணவின்றி அமர்ந்திருப்பதை ஜெயக்குமார் பார்த்துள்ளார். உடனே காரில் இருந்து இறங்கி அந்த முதியவருக்கு முகக் கவசம், உணவு, தண்ணீர் மற்றும் ஒரு சால்வையும் வழங்கினார். பின்னர் பணமும் கொடுத்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்து, அவரை காப்பகத்தில் அனுமதிக்க உத்தரவிட்டார்.

அரசியல்வாதிகள் என்றாலே வாக்குகள் வாங்கும் வரைதான் மக்களை தேடி வருவார்கள் பிரச்சனைகளுக்காக வரமாட்டார்கள் என்பது பலரின் எண்ணம். ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் எப்போதும் ஏழை, எளிய மக்களின் பங்காளனாக, மக்களோடு மக்களாக நின்று தன்னுடைய கடமையை செய்து வருகிறார் என்று தற்போது சமூகவலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர். உண்மைதானே !!