இன்று முதல் மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு..! இனி தினமும் எப்போது முதல் எப்போது வரை தெரியுமா?

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான நேரம் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பது வைரலாகி வருகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 60,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 11,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 2300 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 157 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 57 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுள் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்தவர்கள் 81 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வைரஸ் தாக்குதல் பரவாமல் இருப்பதற்காக அத்தியாவசிய பொருட்களின் கால அவகாசத்தை குறைத்திறப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், "ஊரடங்கு உத்தரவை மீறி பலரும் செயல்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் இருப்பதற்காக தமிழகம் முழுவதும் உத்தரவுகள் கடமையாக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோர் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர். 

மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நேரம் குறைக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மளிகை கடைகள் இயங்கும். பொதுமக்கள் அனைவரும் இந்த நேரக்கட்டுப்பாட்டிற்கு ஒத்துழைக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு அரசினர் உடன் இணைந்து சமூக ஆர்வலர்கள் பொருட்களை கொண்டு சேர்க்கலாம். கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. அதனால் இந்த செயலில் மத சாயலை உருவாக்காதீர்கள். சந்தைகளில் காலை நேரத்தில் சமூக விலகலை கடைப்பிடிப்பதற்கு தன்னார்வலர்கள் உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கையானது தற்போது தமிழகத்தில் வைரலாகி வருகிறது.