பட வாய்ப்பும் இல்லை..! பிரைவேட் அழைப்பும் இல்லை..! கொழுக் மொழுக் நடிகை எடுத்த அந்த முடிவு!

சென்னை: புதுப்பட வாய்ப்புகள் இல்லாததால், தனது பழைய காதலை புதுப்பிக்கும் முயற்சியில் அந்த கொழுக் மொழுக் ஹீரோயின் ஈடுபட்டுள்ளாராம்.


மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அந்த நடிகை, ஆரம்ப காலத்தில் ஒல்லி நடிகரின் நட்பு வட்டத்தில் இருந்தார். பார்ட்டி, பப் என அடிக்கடி இவர்கள் செய்த கலாட்டா வெளியில் தெரியவர, பிறகு அவரை விட்டு ஒதுங்கினார். இதற்கிடையே இந்த ஹனி நடிகை நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்க, அவர் படிப்படியாக  

விரல் வித்தை நாயகனுடன் பழக தொடங்கினார். நம்பர் நடிகையை பிரிந்த வேதனையில் இருந்த விரல் நாயகன், ஹனி நடிகையுடன் ஓட்டலில் ரூம் போட்டு ஒன்றாக வாழும் அளவுக்கு காதலில் முன்னேறினார். இருவரும் நெருங்கிப் பழகி, திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென விரல் வித்தை நாயகனின் தொல்லை எல்லை மீறியதால்  ஹனி நடிகை அவரை விட்டு விலகினார்.  

தற்போது உடல் எடையை குறைத்த ஹனி நடிகை சிக்கென புதிய தோற்றத்தை பயன்படுத்தி பட வாய்ப்புகள் பெற முயற்சிக்கிறார். ஆனால், பெரிதும் வாய்ப்புகள் சோபிக்கவில்லை. அடிக்கடி பார்ட்டி செல்லும் பழக்கம் உள்ள  ஹனி நடிகையை யாரும் தற்போது சீண்டுவதில்லையாம். எனவே, வேறு வழியின்றி இருக்கும் சில பட வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர்,  

தனது பழைய காதலனை ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டுக் கொண்டார். அதற்கு அவரும் ஒப்புக் கொள்ள, இதையொட்டி இருவருக்கும் இடையே மீண்டும் காதல் துளிர்விட தொடங்கியுள்ளதாக, கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.