கர்ப்பம் இல்லையாம்..! நாயகன் தான் காரணமாம்..! சமத்து நடிகை விக்கிக்கு டாடா சொன்னதன் காரணம்!

சமத்து நடிகை ரவுடி இயக்குனரின் திரைப்படத்தை விட்டு விலகுவதற்கு கர்ப்பம் காரணம் இல்லையாம் மாறாக படத்தின் கதாநாயகனாக அறிவிக்கப்பட்ட பிரபல நடிகர் தான் காரணம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்ட காதலர் தினத்தன்று பிரபல ரவுடி இயக்குனரின் புதிய திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகியது. அதில் முன்னணி கதாநாயகிகள் இருவர் நடிக்கப் போவதாகவும் அதுமட்டுமில்லாமல் அனைவருக்கும் பிடித்த பிரபல நடிகர் நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது . 

இதனால் இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருந்த ரசிகர்களின் நெஞ்சங்களில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறார் சமத்து நடிகை. அதாவது பிரபல நடிகை திடீரென இந்த திரைப்படத்தை விட்டு விலக போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கு காரணமாக பலரும் பலவிதங்களில் யோசித்து கமெண்ட் செய்த வண்ணமிருந்தனர். ஒரு சிலர் அந்த சமத்து நடிகை கர்ப்பமாக இருப்பதால் தான் இந்த திரைப்படத்தை விட்டு விலகி இருக்கிறார்கள் என கருத்து தெரிவித்தனர். இருப்பினும் முறையான தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது இதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்த பிரபல நடிகர் பாலிவுட் திரை உலகில் மிகப்பெரிய படத்தில் நடிப்பதற்கு புக் செய்யப்பட்டுள்ளார் . இதனால் அவர் மிக பிஸியாக நடித்து வருவதால் இந்த திரைப்படத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் காணப்படுகிறதாம். இதனால் சமத்து நடிகையின் நேரம் வீணாவதாகவும் அவரிடம் ஏற்கனவே பல திரைப்படங்கள் கைவசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 அந்த சமத்து நடிகை தன்னுடைய மாமியார் வீட்டிற்கு பறந்து சென்றுவிட்டாராம். இதனால் அந்த சமத்து நடிகையின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது இந்த சமத்து நடிகையின் வெளியேற்றத்திற்கு பின்பு மீண்டும் இந்த புதிய திரைப்படத்திற்கு வேறொரு புதிய ஹீரோயின் புக் செய்து திரைப்படத்தை படக்குழுவினர்கள் இயக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.