அந்த 9ம் தேதிக்குப் பின்னே இவ்வளவு விஷயங்களா..? இதெல்லாம் மோடிக்குத் தெரியுமா?

5ம் தேதி 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கேற்றுங்கள் என்று பிரதமர் மோடி சிம்பிளாக சொல்லிவிட்டார். ஆனால், அதன்பின்னே என்னவெல்லாம் இருக்கிறது என்று எக்கச்சக்க தியரிகள் சொல்லப்படுகிறது. மோடிக்கே தெரியாத அந்த தியரிகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.


1980 ஏப்ரல் 5 : அன்றுதான் பாரதிய ஜனதா கட்சியாக அவதாரம் எடுத்த நிகழ்வு அரங்கேறியது. அதுவரை அது, பாரதீய ஜனதா சங்கம் என்றுதான் 1951 முதல் 1980 வரை இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும். இது பின்னர் இந்தியாவின் முன்னணிக் கட்சிகளில் ஒன்றான பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது.

1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பிரதமராக பதவி ஏற்ற பண்டிட்நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி மந்திரி சபையில் ஒரு மந்திரியாக இடம்பெற்றிருந்த சியாமா பிரசாத் முகர்ஜி பல விஷயங்களில்காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுடன், பிரதமர் நேருவுடனும் கருத்து வேறுபாடு கொண்டார். குறிப்பாக காஷ்மீர் தொடர்பாக பிரதமர் பண்டிட் நேரு மேற்கொண்ட அணுகுமுறைகளை கடுமையாக எதிர்த்தார்.

இதற்காக தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்க வேண்டும் என 1950 ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு முடிவு செய்தார்! அதன்படி அவர்1950 ஏப்ரல் 8 ஆம் தேதி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மந்திரி பதவியை ராஜினாமா செய்த சியாம் பிரசாத் முகர்ஜி ஆர். எஸ். எஸ் அமைப்பின் தலைவர் குருஜி கோல்வர்க்ருடன் பலமுறை கலந்தாலோசித்து 1951 ஆண்டு விஜய தசமி தினத்தன்று(அக்டோபர் 21 அன்று ) பாரதீய ஜனதா சங்கம் கட்சியை தொடங்கினார். 

கட்சியின் சின்னமாக தீபம் (விளக்கு) இருந்தது. 1952 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றது. 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூடுதலான இடங்களை வென்றது. சியாமா பிரசாத் முக்ர்ஜிக்குப் பின்னர் தீனதயாள் உபாத்தியாயா தலைவரானர்.1951 ல் தொடங்கப்பட்ட தொடங்கப்பட்ட பாரதிய ஜன சங்கம் 1980 ல் கலைக்கப்பட்டது. 1980 ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் நடைப் பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் செயல்பட முடிவு எடுக்கப்பட்டது

அப்போது நேரம் இரவு 9மணி. அதன்படி விளக்கை சின்னமாக கொண்டிருந்த பாரதீய ஜனதா சங்கம் கலைக்கப்பட்டது அதாவது தீபம் அணைக்கப்பட்டது. அது தேசத்தை எரிக்கும் மதவெறிக்கும்பலின் கூட்டமாக உருவெடுத்தது . அணைக்கப்பட்ட அந்த விளக்கு பாரதீய ஜனதா கட்சி என்ற பெயருடன் மீண்டும் மதகும்பலாக பரவத்தொடங்கிய தருணம். 05.04.1980 இரவு 9 மணி மறுநாள் அதாவது ஏப்ரல் 6 1980 அன்று பாஜக தொடங்கப்பட்டது. இவற்றை நினைவுகூறித்தான் விளக்கேற்றச் சொல்கிறாரம் மோடி.முடியலீப்பா…