வேகமெடுக்கும் கொரோனா! 20 பெண்களை அழைத்துக் கொண்டு ஸ்டார் ஓட்டல் அறையில் தனிமைக்கு சென்ற மன்னர்!

கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தினால் தாய்லாந்து மன்னர் 20 அழகிகளுடன் தனிமையாகிருப்பது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 40,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 8,70,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நோய் தாக்குதலானது ஐரோப்பா முதல் தாய்லாந்து இந்தியா ஆகிய நாடுகளிலும் வெகுவாக பரவி வருகிறது. நிறைய நாடுகளில் சமூக விலகல் முன்னிறுத்தி ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாய்லாந்து நாட்டின் மன்னர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி 20 அழகிகளுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தாய்லாந்து மன்னர் தற்போது ஜெர்மனி நாட்டில் உள்ள பிரபல ஆடம்பர ஹோட்டலை வாடகைக்கு எடுத்து அங்கு தன்னுடைய பணியாளர்கள், அழகிகள் உட்பட 100 பேருடன் அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். கெடுபிடிகள் மிகுதியாக இறந்த காரணத்தினால் மற்ற அனைவரையும் வெளியேற்றி விட்டு, அழகிகளை மட்டும் தன்னுடன் வைத்துள்ளார்.

தாய்லாந்து நாட்டில் இதுவரை 10 பேர் உயிரிழந்த காரணத்தினால்தான் மன்னர் ஜெர்மனி நாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கண்டறிந்த அந்நாட்டு மக்கள் மன்னரின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.  மன்னருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார் நிச்சயமாக தண்டனை கிடைக்கும் என்பதை தெரிந்தும் கூட அந்நாட்டு மக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

மன்னரின் இந்த செயல்பாடானது அந்நாட்டு மக்களை பெரிதளவில் ஆத்திரமடைய செய்துள்ளது.