2 குழந்தைகளுக்கு நடுவே என் கணவன் சடலம்! கேட்க நாதியில்லை! கதறிய மனைவி! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

ஈக்வடார் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த கணவரின் சடலத்தை குழந்தைகளுக்கு நடுவே வைத்து மனைவி கதறிய சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது.


சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக அளவில் பல்வேறு நாடுகளில் பரவ ஆரம்பித்து கோரத் தாண்டவம் ஆடி பல்லாயிரக்கணக்கான உயிர் பலியை வாங்கியுள்ளது. இந்நிலையில் தென்அமெரிக்க நாடான ஈக்வடார் பகுதியில் வெளியே சொல்லப்பட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்பட்டு வருகிறது.

ஈக்வடார் நாட்டின் குவாகுவில் பகுதியில் இறந்த கணவனின் உடலை குழந்தைகளுக்கு நடுவே வைத்து மனைவி கதறி அழும் காட்சி காண்போர் நெஞ்சை பதற வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் தன் கணவரின் உடலை எடுத்துச்செல்ல வருமாறு அதிகாரிகளிடம் இறந்தவரின் மனைவி கதறும் வீடியோவானது நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது. அதற்கு அவர்கள் தன்னை காத்திருக்கும்படி கூறியதாகவும் எல்லாமே நிலைகுலைந்து இருப்பதாக அதிகாரிகள் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ஈக்வடார் நாட்டில் நாளொன்றுக்கு 30 பிணங்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதாகவும் தற்போது நாளொன்றுக்கு 150க்கும் மேற்பட்ட பிணங்களை அப்புறப்படுத்தி வருவதால் நிலைகுலைந்து போய் உள்ளதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்த தகவலை அந்த நாட்டின் அதிபர் லெனின் மெரினாவே உறுதி செய்திருக்கிறார்.

அதேபோல் பலி எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகரித்து கொண்டே வருவதால் செய்வதறியாது அந்த நாட்டின் அரசாங்கம் தவித்து வருகிறது. இதற்காக 700 க்கும் மேற்பட்ட மருத்துவர்களையும் செவிலியர்களும் உடனடியாக பணியமர்த்தும் பணியிலும் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த நாட்டில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பல செவிலியர்களும் பரிதாபமாக நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் செய்வதறியாது அந்நாட்டில் உள்ள மக்கள் முதல் அரசாங்கம் வரை ஸ்தம்பித்துப் போயுள்ளனர். தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நோய் தொற்றினால் இறப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் மோசமாக மாறிக்கொண்டிருக்கிறது. 

இதில் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதில் கூட மிகப்பெரிய சிரமங்களை அந்த நாட்டின் அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை வீட்டிலேயே வைத்துக் கொள்ள முடியாமல் வீதிகளிலும் வைத்து எரிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது ஈக்வடார் நாட்டில் இறந்தவர்களின் உடல்களை வீதிகளில் வைத்து இருக்கும் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஈக்வடார் நாட்டில் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்த சூழ்நிலையில் அந்த நாட்டில் இருந்து வெறும் 120 பேர் தான் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என  கூறி வருவது சந்தேகம் அடைய செய்துள்ளது.