என்னதான் மனைவியாக இருந்தாலும் பொதுமேடையில் இப்படியா? மணிமேகலையின் கணவர் செயலை பார்த்து வாயடைத்த டிடி..!

சென்னை: டிவி தொகுப்பாளினி மணிமேகலையை மேடையில் வைத்து அவரது கணவர் செய்த செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


சன் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை அதில் இருந்து விலகி விஜய் டிவியில் தற்போது பணிபுரிந்து வருகிறார். அவர், நடன இயக்குனரான ஹூசைனை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் மணிமேகலை பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்குகிறார்.   இந்நிகழ்ச்சியில், மணிமேகலையுடன் மேடைக்கு வந்த ஹூசைன் திடீரென நடனம் ஆட தொடங்கினார்.

அவரது ஸ்டெப்கள் பிடிபடாமல் மணிமேகலை குழப்பமடைந்தார். திடீரென மணிமேகலையை கீழே தள்ளி ஹூசைன் காலை வாரி விட்டார்.   இதனால், மணிமேகலை செய்வதறியாது திகைத்துப் போனார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மணிமேகலை, ''முதலில் இந்த ஸ்டெப்களை ஆட கத்துக்கனும். டான்ஸ் ஆட தெரிஞ்ச பயலுங்ககூட இனிமே நிகழ்ச்சி பண்ணக் கூடாது.

பப்ளிக்ல நம்மள அசிங்கப்படுத்திட்டானுங்க. மிஸ்டர் ஹூசைன், ஒரு நாள் பெரிய நடன கலைஞரா நான் வருவேன், எழுதி வச்சிக்கோ ,'' என்று மணிமேகலை குறிப்பிட்டுள்ளார்.