குழந்தைகளுக்கு சப்ஜா விதைகளுடன் வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்துகொடுங்கள்... எடையைக் குறைக்கும், இரும்புச் சத்துக்களும் கிடைக்கும்.

நாம எல்லாரும் நிறைய தடவை சாப்பிட்டிருக்கிறோம், அது என்ன? எப்படி இருக்கும்னே தெரியாமலேயே, ரொம்ப விரும்பி சாப்பிட்டிருக்கோம்.


எப்படி தெரியுமா? பலூடாவை (FALOODA) ரசிச்சு சாப்பிட்ட எல்லாருமே கண்டிப்பா இந்த சியா விதைகளை சாப்பிட்டுருக்கோம். சியா விதைகள் அல்லது சப்ஜா என்றழைக்கப்படும் இந்த விதைகள், புதினா தாவர குடும்ப வகையைச் சேர்ந்த ஒரு மூலிகைச் செடியிலிருந்து பெறப்பட்டவை.

இது குளிர்பானங்கள், சர்பத், ஐஸ்கிரீம், புரூட் சாலட், போன்றவற்றில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பார்ப்பதற்கு எள் மற்றும் கருஞ்சீரகத்தைப் போன்று இருக்கும். நீரில் 15 நிமிடங்கள் ஊரவைத்தால் நீரினை உறிஞ்சி அளவில்பெரியதாகவும், வழவழப்புத்தன்மையுடனும் இருக்கும்.

பண்டைய காலத்தில் குருக்கள்களுக்கு வழங்கும் காணிக்கையாகவும், பிரசாதமாகவும் பயன்படுத்தி வந்தனர் பழங்குடியினர். அந்த காலத்தில் அதிகஅளவு உபயோகித்து வந்தாலும், நவீன காலத்தில் அதன் மகத்துவத்தையும், நன்மைகளையும் புரிந்து அதனை உபயோகிக்குமாறு பிரபலப்படுத்தி வருகின்றனர்.

சியா விதைகளில் ஒமேகா 3- கொழுப்பு அமிலங்கள், நார்சத்துக்கள், ஆன்டிஆக்சிடெண்ட்ஸ், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.  

· நீரிழிவு நோயைக் குணப்படுத்த உதவுகிறது.

· சியாவிதைகள் அதிகஅளவு நார்சத்துக்களைக் கொண்டது அதனால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.

· சியா விதைகளை தயிரில் கலந்து காலை 11 மணியளவில் எடுத்துக் கொள்ளும் போது, பசியின்மையை ஏற்படுத்தி மேற்க்கொண்டு அதிக கலோரி உள்ள உணவு எடுத்துக்கொள்வது தவிர்க்கப்படுகிறது. இதனால் உடல் எடை குறைக்க உதவுகிறது.

· பாலில் உள்ள கால்சியத்தைக் காட்டிலும் சியா விதைகள் 5 மடங்கு கால்சியம் சத்து கொண்டது.

· ஆரஞ்சு பழத்திலிருப்பதைக் காட்டிலும் 7 மடங்கு அதிக விட்டமின் சி சத்து கொண்டது. கீரைகளில் இருப்பதைக் காட்டிலும் 3 மடங்கு அதிக இரும்பு சத்து கொண்டது.

· வாழைப்பழத்தில் இருப்பதைவிட 2 மடங்கு பொட்டாசியம் சத்து கொண்டது.

· குளிர்ந்த பாலோடு சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது உடல் சூட்டைத் தணிக்கிறது.

வெறும் விதைகளாகவும் எடுத்துக் கொள்ளலாம், 2 ஸ்பூன் விதைகளை தண்ணீரில் ஊரவைத்தும் எடுத்துக் கொள்ளலாம், பால், தயிர், ஐஸ்கிரீம் , ஜெல்லி, சர்பத், ஜிகர்தண்டா போன்றவற்றோடு சேர்த்து எடுத்துக் கொள்ளலாம், ஆனால் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது ஒவ்வாமை மற்றும் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும்.

-M.ராமலெட்சுமி.