எல்லாத்துக்கும் காரணம் இந்த கொரோனா..! விஜய் ரசிகர்களுக்கு சோகமான செய்தி..!

நாடு முழுவதும் கொரோனாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாஸ்டர் ரிலீஸ் தள்ளி போகும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.


உலகையே அச்சுறுத்தும் கொடூர கொரோனாவில் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமைடந்து வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் மாஸ்டர் படம் திட்டமிட்ட படி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து தியேட்டர்கள் வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

விஜய்யின் படங்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் கொரோனாவின் கோரதாண்டவத்தினால் அமெரிக்க அரசும் அங்குள்ள தியேட்டர்களை 6 முதல் 12 வாரங்கள் வரை மூட முடிவு செய்துள்ளது.

அதனால் அங்குள்ள சூழலையும் மனதில் வைத்து மாஸ்டர் பட ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தை படக்குழுவினர் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை மே 1ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கோலிவுட் வட்டரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்ததுமே மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போய்விடுமே என்று விஜயின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.