என்ன வேணுமோ எடுத்துக்கோ... ஆள் இல்லாத ரொட்டி கடை!

கோவையில் ஊரடங்கு காலத்தில் ரொட்டிக் கடை உரிமையாளர் செல்ப் சர்வீஸ் என்ற ரொட்டிக் கடை ஒன்றை ஊரடங்கு உத்தரவினால் நடத்திவருகிறார்.


கோவை ரத்தினபுரி பகுதியில் விக்னேஷ் என்பவர் நெல்லை முத்து விலாஸ் ஸ்வீட்ஸ் & பேக்ஸ் என்ற கடையை நடத்தி வருகிறார். ஊரடங்கு காலத்தில் மக்களின் பசியாற்ற ரொட்டி கிடைக்க மனிதத்தின் முதற்படி என செல்ப் சர்வீஸ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். 

அதன்படி அக்கடை முன்பு ரொட்டி பாக்கெட்டுகள் வைக்கப்பட்டு இருக்கும். ஆனால் கடை பணியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு ரொட்டி பாக்கெட்டின் விலை 30 ரூபாய் எனவும், ரொட்டியை எடுத்துக் கொண்டு பணத்தை அங்குள்ள ஒரு பெட்டியில் வைத்து செல்லவும் எனவும் எழுதி ஒட்டியுள்ளார். 

இதன்படி அப்பகுதி மக்கள் ரொட்டிகளை எடுத்துக்கொண்டு பணத்தை அப்பெட்டியில் வைத்து செல்கின்றனர். இவ்வகையில் நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 பாக்கெட் ரொட்டி விற்பனையாவதாகவும், எந்நேரத்திலும் மக்களுக்கு ரொட்டி கிடைக்க செய்ய வேண்டுமென்ற நோக்கில் இதனை செய்துள்ளதாகவும் உரிமையாளர் விக்னேஷ் தெரிவித்தார். 

அனைவரும் ரொட்டியை எடுத்துக் கொண்டு பணத்தை முறையாக வைத்து செல்வதாகவும், இதேபோல உணவின்றி தவிப்பவர்களுக்கு ரொட்டி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். பணியாளர் இல்லாத கடையும், பணத்தை முறையாக வைத்துச் செல்லும் மக்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.