சென்னையில் கொரோனா..! ஆனால் ஈரோடு முடக்கப்படுவது ஏன்? சற்று முன் வெளியான தகவல்!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரத்தில் கொரோனா நோய் தாக்குதல் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டத்தை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது ஏன் என்பதற்கான பதில் சற்று முன் கிடைத்துள்ளது.


தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாக இதுவரை நம்பப்பட்டு வந்தது. தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட தகவல்களிலும் கொரோனா பாதிப்புக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவே கூறப்பட்டு வந்தது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களின் பட்டியலில் ஈரோடு இடம் பெற்றது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முடக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல் வெளியானது.

இந்த பட்டியலில் சென்னை, காஞ்சிபுரத்துடன் ஈரோடும் இருந்தது. எதனால் ஈரோடு மாவட்டம் இந்த பட்டியலில் உள்ளது? அங்கு யாருக்கும் கொரோனா நோய் உள்ளதா? என்று மக்ககள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இந்த கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். அதன்படி, கொரோனா உறுதியான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் ஈரோடு மாவட்டத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு ஆளான தாய்லாந்து நாட்டினர் இரண்டு பேரும் பெருந்துரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே கொரோனா பாதிப்பு மாவட்ட பட்டியலில் ஈரோடு சேர்க்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.