டெல்லியில் கடந்த ஆண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் ஒரே வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அந்த வீட்டில் அவர்களது ஆவி நடமாட்டம் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் 11 பேர் தற்கொலை செய்த வீட்டில் பேய்கள்? கண்டுபிடிக்க இளைஞர்கள் எடுத்த துணிச்சல் முடிவு!
இந்நிலையில் அந்த வதந்தியை உடைக்கும் பொருட்டு இளைஞர்கள் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அன்று ஒரே வீட்டைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் அதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில் மாந்திரீக முறையில் ஏதோ செய்து வந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்கொலைக்கான காரணம் கடன் பிரச்சனையாக கூட இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து அந்த குடும்பத்தில் வேறு யாரேனும் உயிருடன் இருக்கின்றனரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் தற்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தினேஷ் தத்தாவத் என்பவர் மட்டுமே உயிருடன் இருப்பதாக தெரியவந்தது இந்நிலையில் அந்த வீடு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்தபோதிலும் அருகில் உள்ளவர்கள் அந்த வீட்டை பேய் வீடு என தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக யாரேனும் கடை மற்றும் வேறு ஏதேனும் தொழில் செய்து வந்தாலும் அவர்களிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த வதந்தியை உடைக்கும் பொருட்டு தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான இருவர் அந்த வீட்டில் சில நாட்களாக தங்கி பேய் இல்லை என நிரூபிக்கும் வண்ணம் அந்த வீட்டிலேயே தனது பாட்டி தூக்குப் போட்டு இறந்து ரூமிலே அவர்கள் மூவரும் படுத்துறங்கி உள்ளனர்.
இதையடுத்து அவர்கள் மூவரும் அந்த வீட்டில் இருப்பதை பார்த்த அந்த ஊர் மக்கள் இந்த வீட்டில் வேறு ஆவி ஏதும் இல்லை என நம்பி வருகின்றனர். அந்த வீடு ரோட்டிற்கு மீது அருகே உள்ளதால் பலரும் விலைக்கு கேட்டு வந்துள்ளனர். இப்போது விலைக்கு கொடுத்தால் பேய் இருப்பதாக பரவிய வதந்தி உண்மை ஆகிவிடுமோ என தினேஷ் வீட்டை விற்க மனம் இல்லை எனவும் வருபவர்களை திருப்பியனுப்பி வருகிறார்.