குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குளிர்பானத்தில் மயக்க மருந்து! 17 வயது சிறுமியுடன் மாறி மாறி பாலியல் வல்லுறவு! சிக்கிய 2 பேரை சிதைத்த பொதுமக்கள்!
திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் ஏரிக்கரையில், ஆட்டோவில் வந்த சிலர், மயக்க நிலையில் இருந்த சிறுமி ஒருவரை கிழே இறக்கியுள்ளனர். இதைப் பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள் சத்தம்போட, ஆட்டோவில் இருந்தவர்கள் தப்பியோட முயற்சித்தனர். அவர்களில், 2 பேரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்துவிட, ஒருவர் மட்டும் தப்பிவிட்டார்.
பிடிபட்ட நபர்களை அடித்து உதைத்த பொதுமக்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து, மயக்க நிலையில் இருந்த சிறுமியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக, தெரிவித்தனர். இதன்பேரில், சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, பிடிபட்ட 2 பேரை விசாரித்தபோது, திருவள்ளூரை அடுத்த பட்டறை கிராமத்தில் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் குப்பை பொறுக்கி வந்துள்ளார். கிருஷ்ணகிரியை சேர்ந்த, அந்த சிறுமியின் குடும்ப விவரம் தெரியவில்லை. அவரிடம் நைசாகப் பேசிய ஆட்டோ டிரைவர்கள் 3 பேர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத ஏரிக்கரையில் கொண்டுவந்து வீச முயன்றுள்ளனர். அப்போதுதான் சிக்கிக் கொண்டனர். இதன்படி, ஏகாட்டூரை சேர்ந்த பூபாலன், அதிகத்துரை சேர்ந்த முனுசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். எஞ்சிய இன்னும் ஒரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.