நடு ரோட்டில் தலை வாழை இலை போட்டு மட்டன் பிரியாணி விருந்து! தேனியை மிரட்டிய 2 பேர்! வைரல் வீடியோ!

உச்சகட்ட போதையில் நடுரோட்டில் அமர்ந்துகொண்டு இருவர் பிரியாணி சாப்பிட்ட வினோதம் தேனியில் நிகழ்ந்துள்ளது. இவர்களின் வீடியோ வைரலாகியுள்ளது.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் உச்சகட்ட போதையில் இருந்த இருவர் தள்ளாடிக்கொண்டே அங்கும் இங்கும் திரிந்து, பின்னர் நடுரோட்டில் அமர்ந்தபடி வாங்கிய பிரியாணி பொட்டலத்தை பிரித்து, எங்கு அமர்ந்திருக்கிறோம் என்ற எவ்வித சிந்தனையும் இன்றி பிரியாணியை அரைமணி நேரத்திற்கும் மேலாக சாப்பிட்டு கொண்டிருந்தனர். 

அவ்வழியாக கார், பேருந்து முதல் கனரக வாகனங்களும் சென்றுகொண்டிருந்தன. வாகன ஓட்டிகள் கவனமாக வந்ததால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. மாறாக, வாகன ஓட்டிகளே அவதிக்கு உள்ளாகினர்.

இந்த போதை ஆசாமிகளை வீடியோ எடுத்தவர், அதனை சமூக வலைதளங்களில் பதிவெற்றியுள்ளார். இந்த போதைக்காரங்களை உடனடியாக காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், மற்றவர்கள் திருந்துவர் என விடியோவை பார்த்தவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இவர்கள் இருவரும் திண்டுக்கல் அடுத்த தேவதானப்பட்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.