தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அதில், அடுத்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதற்கான இலக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
அடேங்கப்பா... 20 லட்சம் வேலை வாய்ப்பு ரெடி... எடப்பாடியார் அதிரடி திட்டம்.
அப்போது, சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடல், 10 புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் அடிக்கல் நாட்டுதல் மற்றும் 3,489 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்கம் என மொத்தம் 46 திட்டப் பணிகளை 33,465 கோடி ரூபாய் முதலீட்டில் 2,19,714 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மாபெரும் விழா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஓட்டல் லீலா பேலசில் தொழில் துறை சார்பில் நடைபெற்றது.
அடுத்த 4 ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும், உற்பத்தித் துறையில் ஆண்டுக்கு 15 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்திடவும், 2030-ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை 30 சதவிகிதமாக உயர்த்திடவும் இலக்கு நிர்ணயித்து, புதிய வெற்றிப் பயணத்தினை துவக்கி வைத்து, இந்த புதிய தொழிற் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும் இலக்கு நிர்ணயித்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவை தவிர தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் இங்கிலாந்து- இந்தியா வணிக சபை இடையே ஒரு நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 3,377 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 7139 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களை துவக்கி வைத்தார். சிப்காட் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டினையொட்டி தபால் தலை வெளியிடப்பட்டது.
மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் சிறந்த தொழில் முனைவோர், சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதி தொழில் முனைவோர், சிறந்த மகளிர் தொழில் முனைவோர், சிறந்த வேளாண் சார்ந்த தொழில் முனைவோர் ஆகிய பிரிவுகளில், சிறப் பாக செயல்படும் நிறுவனங் களுக்கும் மேலும் இத்துறைக்கு அதிக அளவில் கடன் வழங்கிய வங்கிகளுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்கி கவுரவித்தார். எடப்பாடியாரின் திடீர் தொழில் கொள்கை அறிவிப்பு எதிர்க் கட்சிகளை அதிர வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.