4 வயது குழந்தைக்கு காய்ச்சல்! மருத்துவமனைக்கு அழையாய் அழைந்த பெற்றோர்! டாக்டர்கள் செய்த நெஞ்சை உலுக்க வைக்கும் செயல்! பிறகு நேர்ந்த பரிதாபம்!

எர்ணாகுளம்: மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால், பழங்குடியினத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவின் மலப்புரம் மாவட்டம், நிலாம்பூர் கிராமத்தை அடுத்துள்ள எடகோடு காலனியில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இப்பகுதியில் வசிக்கும் ஒருவரின் மகளான ராஜி கிருஷ்ணா (4 வயது) திடீர் காய்ச்சல் காரணமாக, கடந்த செப்டம்பர் 13ம் தேதி அருகில் உள்ள தனியார் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

டாக்டர் சில மருந்துகளை பரிந்துரைத்த நிலையில், 10 நாள் கழித்து மீண்டும் வரும்படி கூறியிருக்கிறார். ஆனால், 10 நாள் கழித்து, செப்டம்பர் 23ம் தேதியன்று ராஜியை அழைத்துக் கொண்டு பெற்றோர் சென்றபோது, அந்த மருத்துவர் விடுமுறையில் உள்ளதால், அடுத்த நாள் வரும்படி, மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.  

வேறு டாக்டர் யாரேனும் சிகிச்சை அளித்து, தங்களது மகளை காப்பாற்றும்படி, பெற்றோர் கோரிக்கை விடுத்தும் மருத்துவமனை நிர்வாகம், அவர்கள் பழங்குடியினத்தவர் என்பதால் நிராகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியை வீட்டிற்கு எடுத்து வந்தபோது, வரும் வழியிலேயே, கடும் வாந்தி காரணமாக, சிறுமி ராஜி உயிரிழந்துவிட்டாள்.

இதன்பேரில், அப்பகுதி கவுன்சிலர் தலைமையில் உள்ளூர் மக்கள் கண்டனப் போராட்டம் மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவமனையை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்த மக்கள், இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் புகார் அளிக்கவும் தீர்மானித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பொதுமக்களின் நலனை பாதுகாப்பேன் என்று, அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.அன்வார் உறுதி அளித்துள்ளார்.