சிறுமிக்கு தாத்தா லவ் லெட்டர் கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது கோயம்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனக்கு பிடிச்சிருக்கு! உனக்கு ஓகேவா..! 16 வயது இளம் பெண்ணை வெளிப்படையாக கட்டிலுக்கு அழைத்த 66 வயது முதியவர்! கோவை அதிர்ச்சி!
கோயம்புத்தூருக்கு அருகே போத்தனூர் என்ற இடம் அமைந்துள்ளது. போத்தனூருக்குட்பட்ட பஜனை கோவில் தெருவில் முகமது பீர் பாஷா என்ற 66 வயது முதியவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரும் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அவ்வப்போது முகமது வீட்டருகே செல்வார்.
அப்போதெல்லாம் முகமதுக்கு அந்த சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. சிறுமி மீது தோன்றிய ஆசையை தன்னுடைய மனதிற்குள்ளேயே வைக்க அவருக்கு விருப்பமில்லை. அதனால் காதல் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். "எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. உனக்கு ஓகேவா" என்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தை சிறுமியிடமே கொண்டு கொடுத்துள்ளார்.
கடிதத்தை வாங்கி பயந்து போன சிறுமி அதனை தன்னுடைய பெற்றோரிடம் காண்பித்துள்ளார். பின்னர் குழந்தையின் தாயார் உறவினர்கள் அனைவரையும் அழைத்து கடிதத்தை காண்பித்துள்ளார். உறவினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு முகமதை கண்டித்தனர். அந்த கண்டிப்புகளை முகமது கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை.
மீண்டும் அந்த சிறுமியிடம், "என்னுடைய கடிதத்திற்கு என்ன விடை" என்று கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் பயந்து போன சிறுமி வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அச்சமடைந்தார். நிலைமை இவ்வாறே தொடர்ந்தால் தன்னுடைய மகள் நிச்சயமாக மனநலம் பாதிக்கப்படுவார் என்ற அச்சத்தில், சிறுமியின் தாயார்அப்பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் முகமது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபனமானதால் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.