மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்ததற்காக 7 சிறுவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவது ஏர்வாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 சிறுவர்கள்..! ஒருவன் மாறி மற்றொருவன்..! மனநலம் பாதித்த 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்! ஏர்வாடி பரபரப்பு!
கேரளாவை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். ஏர்வாடியில் உள்ள தர்காவுக்கு அருகே அமைந்திருக்கும் காப்பகத்தில் தங்கி வந்துள்ளார். 4-ஆம் தேதி இரவன்று அந்தப்பெண் காப்பகத்திலிருந்து மாயமாகியுள்ளார்.
மறுநாள் அதிகாலையில் அப்பகுதிக்கு அருகே சாலையோரத்தில் அந்த பெண் மீட்க்கப்பட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில், தன்னுடைய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் 14 வயது முதல் 18 வயது வரையுள்ள 7 இளைஞர்கள் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இளைஞர்கள் கஞ்சா போதையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வெளியே இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கீழக்கரை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது ஏர்வாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.