10 நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறிய பயங்கரம்! 8 வயது சிறுவன் உடல் சிதைந்து பலியான பரிதாபம்! சங்கரன்கோவில் சம்பவம்!

8 வயது சிறுவனை பத்து நாய்கள் கடித்து குதறியதில் சம்பவயிடத்திலேயே இறந்துள்ளது சங்கரன்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சங்கரன்கோவிலில் ரெங்கசமுத்திரம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சேதுபதி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய வயது 38. இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் மற்றும் ஒரு பெண் குழந்தையுள்ளது. இவருடைய மூன்றாவது மகனின் பெயர் சந்தோஷ். 8 வயது சிறுவனான இவன், அப்பகுதியிலுள்ள ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

பள்ளி விட்டு வந்தவுடன் தினமும் தன்னுடைய நண்பர்களுடன் விளையாடுவதை சந்தோஷ் வழக்கமாக கொண்டிருந்தான். நேற்றும் அதுபோன்ற நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த சந்தோஷ் இரவு 7 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சந்தோஷை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

அப்போது சந்தோஷ் அப்பகுதியை சேர்ந்த அந்தோனிசாமி என்பவரின் தோட்டத்தில் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. சந்தோஷின் பெற்றோர்கள் பதறியடித்து கொண்டு சென்று பார்த்தனர். தங்கள் ஆருயிர் மகனை 10-க்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள் கடித்து குதறி சாகடித்து இருப்பதை கண்ட அவர்கள் துக்கத்தில் உறைந்தனர்.

பின்னர் சந்தோஷம் பெற்றோர் சம்பவம் குறித்து அப்பகுதி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சந்தோஷ் எவ்வாறு இறந்தான் என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுவனின் உடல் கடுமையாக சிதைந்து இருந்ததால், பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவமானது சங்கரன்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.