பச்சிளம் குழந்தையை கடத்திக் கொலை செய்த 8 வயது சிறுவன்! அதிர வைக்கும் காரணம்!

8 வயது சிறுவனின் தம்பியை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதில் குட்டிச் சிறுவனின் நெற்றியில் அடிபட்டு ரத்தம் வந்து வீங்கியது.


இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே மோதல் வெடித்து வாய்ச்சண்டை ஏற்பட்டது. 

இந்நிலையில் அடிபட்ட சிறுவனின் மனதில் மிகவும் விபரீதமான முறையில் பழியுணர்ச்சி உருவானதை யாரும் அறியவில்லை. சிறுமியின் மீதான கோபமும் பழியுணர்ச்சியும் சிறுமியின் தம்பியான ஒன்றரை வயதுக் குழந்தையின் மீது திரும்ப அந்த குழந்தையை அடித்து கொன்ற சிறுவன சாக்கடையில் கொண்டு போய் போட்டான் 

இதனைத் தொடர்நது ஏற்பட்ட அச்சம் காரணமாக சிறுவன் தலைமறைவானான் இந்நிலையில் இரு குடும்பங்களிலும் இரு சிறுவர்கள் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பிஞ்சுக் குழந்தையின் உடலை சாக்கடையில் இருந்து மீட்டனர். 

இந்நிலையில் தலைமறைவான 8 வயது சிறுவனும் சிக்கியபோது அவனுக்கு மன நல ஆலோசகர்கள் கவுன்சிலிங் கொடுத்தபோது சிறுவன் குழந்தையை கொன்றது தெரிய வந்தது. சிறுவனை மன நலம் கருதி அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ள போலீஸார், இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

8 வயதில் பழி தீர்க்கும் உணர்வு ஒரு சிறுவனுக்கு வருகிறது என்றால் சமூகத்தில் யார் அதற்கு பொறுப்பாளி என்றும் இந்த குணத்தை அந்த சிறுவன் பெற்றான் என்பதும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.