9 மாத குழந்தையுடன் வல்லுறவு! வாயை பொத்தி அரங்கேற்றிய மாபாதகம்! பிறகு அரங்கேறிய பேரதிர்ச்சி!

தெலுங்கான மாநிலம் வாரங்கல்லில் 9 மாத பெண் குழந்தையிடம் பாலியல் பலாத்கார நடவடிக்கையில் ஈடுபட்ட கொடூரன் அந்தச் சிறுமி அழாமல் தடுக்க வாய் அடைத்தால் அந்தக் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது.


தனது வீட்டு மொட்டை மாடியில் தனது பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை அந்தக் குழந்தையின் வீட்டுக்கு பக்கத்து வீட்டு நபர் திருட்டுத் தனமாகக் கடத்திச் சென்று தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது அந்தக் குழந்தை அழத் தொடங்கியதையடுத்து அவன் குழந்தையின் வாயை அடைத்ததால் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தையைக் காணாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் விரைவிலேயெ குழந்தை பக்கத்து விட்டு நபரிடம் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.

உடனடியாக குழந்தையை மீட்டு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். குழந்தையின் உடல் உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குழந்தையின் மரணத்துகான தெளிவான காரணம், குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பது உள்ளிட்டவை உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்தபிறகே தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்தக் கொடூரன் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.