ஒரே பைக்கில் 7 பேர் மற்றும் 2 நாய்க்குட்டிகள் பயணித்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஒரு டூ வீலரில் 7 பேர்! 2 நாய்கள்! மொத்தம் 9 பேர் பயணம்! டேய் எங்கடா இருக்கீங்க நீங்க?
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே சாலை விதிகள் மிகவும் கடுமையாக பட்டு வருகின்றன. புதிதாக வந்த வாகன மசோதா விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் அபராதத்தையும் அளிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசானது வாகன சீர்திருத்தத்தை அடைந்துவிட முடியும் என்று எதிர்பார்க்கிறது.
ஆனால் அந்த எண்ணத்தை பொய்யாக்கும் விதத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஒரு இருசக்கர வாகனத்தில் "ட்ரிபிள்ஸ்" போனாலே குற்றமென கூறப்படும் நிலையில், "7 பேர் மற்றும் 2 நாய்க்குட்டிகள்" ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரை தவிர இன்னும் 6 பேர் அமர்ந்திருந்தனர். மேலும் வாகனத்தின் முன் பகுதியில் ஒரு நாய் குட்டியும், பக்கவாட்டிலிருந்த பையில் மற்றொரு நாய்க்குட்டியும் அமர்ந்திருந்தன. சாலையில் சென்ற மற்றொருவர் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனை கண்ட நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் "அது பைக் அல்ல; லோடு ஆட்டோ என்றும்" சிலர் நகைச்சுவையாக கமெண்ட் அடித்துள்ளனர். மேலும் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.