பிரபல நடிகர் ஒருவருடன் நடிக்கும் வாய்ப்பை கொடுக்குமாறு பிரபல நடிகர் ஒருவரின் மகள் இயக்குனரின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.
அந்த நடிகர் வேணும்! இயக்குனரின் காலில் விழுந்து கெஞ்சிய பிரபல நடிகரின் மகள்!
இந்திய அளவில் மிக முக்கியமான நடிகராக கருதப்படுவர் சயப் அலி
கான். சயப் அலி கானின் தந்தை மன்சூர் அலி கான் பட்டோடி – தாய் ஷர்மிளா தாகூர். இந்திய
அளவில் பிரபலமான கிரிக்கெட் வீரராக விளங்கியவர் மன்சூர் அலி கான் பட்டோடி. மேலும் இவர்
நவாப் வம்சத்தை சேர்ந்தவர். அதாவது ராஜ வம்சத்தை சேர்ந்தவர். இவரது மகன் சயப் அலி கான்
இந்தியில் தற்போது முன்னணி நாயகன்.
சயப் அலிகானுக்கும்
அவரது முதல் மனைவி அம்ரிதாவுக்கு பிறந்தவர் சாராஅலி கான். கேதர்நாத் எனும் இந்திப்படம்
மூலம் சாரா திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து சிம்பா எனும் படத்தில் சாரா அலி கான் கதாநாயகியாக நடித்தார்.
சிம்பா கடந்த வாரம்
வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் முதல் 100 கோடி ரூபாய் வசூலை
எட்டும் திரைப்படமாக சிம்பா இருக்கும் என்று கருதப்படுகிறது. சிம்பாவில் கதாநாயகனாக
நடித்திருப்பவர் ரன்வீர் சிங். இவர் வேறு யாரும் இல்லை பிரபல நடிகை தீபிகாவை அண்மையில் திருமணம் செய்து கொண்டார் ரன்வீர் சிங். இதனிடையே
சிம்பா படத்தில் சாரா அலிகானை தனக்கு ஜோடியாகக் வேண்டும் என்று ரன்வீர் சிங் வலியுறுத்தியதாக
தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவலை
சிம்பா படத்தின்இயக்குனர் ரோஹித் ஷெட்டி மறுத்துள்ளார். சிம்பா படத்திற்கு கதாநாயகி
தேடிக் கொண்டிருந்தோம். புதுமுகம் ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்து
இருந்தோம். அப்போது திடீரென சாரா அலி கான் என்னை பார்க்க வந்தார். நவாப் வம்சத்தை சேர்ந்த
சயப் அலிகானின் மகள் என்பதால் உடனடியாக அவரை சந்தித்தேன்.
என்ன விஷயம் என்று
கேட்ட போது சிம்பா படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடிக்க விரும்புவதாக கூறினார்.
மேலும் கேதர்நாத் படத்தில் தனது நடிப்பை பார்த்துவிட்டு முடிவு செய்யுமாறு சாரா தெரிவித்தார்.
ஆனால் ரன்வீர் சிங்குடன் பேசி தான் இந்த முடிவை எடுக்க முடியும் என்று தான் கூறியதாக
ரோஹித் ஷெட்டி தெரிவித்தார். அப்போது திடீரென எனது காலில் விழுந்த சாரா தனக்கு நிச்சயமாக
ரன்வீர் சிங்குடன் நடிக்கும் வாய்ப்பு வேண்டும் என்று கெஞ்சியதாக ரோஹித் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தான் வேறு வழியில்லாமல் சாரா அலி கானை சிம்பாவில் கதாநாயகியாக்விட்டதாக ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார். ஆனால் சிம்பாவில் சாரா அலி கானின் பெர்மாமன்ஸ் அருமையாக இருந்ததாகவும் ரோஹித் சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.