மத்திய பிரதேச மாநிலத்தில் அமைச்சர் அந்தஸ்தில் இருந்த சாமியார் பாயு மகாராஜ் தற்கொலைக்கு உடந்தையாக இருந்த ஒரு பெண் மற்றும் உதவியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இளம் பெண்ணுடன் தகாத உறவு! அமைச்சர் தற்கொலை! பரபரப்பு பின்னணி!
மத்தியப் பிரதேசத்தைச்
சேர்ந்தவர் பாயு மகாராஜ். அரசியல் செல்வாக்கு மிகுந்த சாமியாராக வலம் வந்த இவர்,
தனது வீட்டில், கடந்த 2018, ஜூன் 12ம் தேதியன்று இறந்து கிடந்தார். விசாரணையில்,
சாமியார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக, தெரியவந்தது.
இதுபற்றிய விரிவான
விசாரணையில், பாயு மகாராஜ்க்கு, பெண் தொடர்பு இருந்ததாகவும், இதன்பேரில் அவர்
தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அவரை
தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி பாலக் என்ற பெண்ணையும், பாயு மகாராஜின்
உதவியாளர்களாக இருந்த விநாயக் தூதாலே, ஷரத் தேஷ்முக் ஆகியோரை போலீசார் கைது
செய்துள்ளனர்.
இதில், பாலக்குடன் பாயு
மகாராஜ்க்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இதன்பேரில், தன்னை திருமணம்
செய்துகொள்ளும்படி அடிக்கடி பாலக் தொந்தரவு கொடுத்துவந்துள்ளார். மன உளைச்சலுக்கு
ஆளானதால், பாயு மகாராஜ் தற்கொலை செய்துகொண்டதாக, இந்தூர் போலீஸ் தலைமை அதிகாரி
ஹரிநாராயணன் சாரி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
பாலக் மற்றும் பாயு
மகாராஜ்க்கு பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பான
ஆவணங்கள் பலவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாக, போலீசார்
குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, அவரது
மரணத்திற்கு ஏதேனும் அரசியல் காரணம் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்தது
குறிப்பிடத்தக்கது. பாயு மகராஜ் சாமியாராக இருந்தாலும் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க
ஆட்சி இருந்த போது கேபினட் அமைச்சர் அஸ்தஸ்தில் வலம் வந்தவர். ஒரு கட்டத்தில்
சர்ச்சையானதால் அந்த அந்தஸ்து தனக்கு வேண்டாம் என்று கூறியவர்.