நண்பனின் மனைவியை தன்னுடன் குடும்பம் அழைத்த இளைஞன்..! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

டெல்லியில் நண்பரின் மனைவி தன்னுடன் வாழ மறுத்ததால் தன்னைத்தானே சுட்டுக் கொன்று தற்கொலை முயற்சி வைத்த ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.


டெல்லியில் உள்ள திக்ரி சூரத் பகுதியில் ரமேஷ் மற்றும் ரூபா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். ரமேஷுக்கு விகாஸ் என்ற நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் செய்த குற்றச் செயலால் அவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ரமேஷ் சிறையில் இருந்து வந்த நேரத்தில், ரமேஷின் மனைவி ரூபா தன்னுடைய கணவரின் நண்பரான விகாஸ் உடன் நெருங்கி பழகி வந்துள்ளார். தன் கணவர் வீட்டில் இல்லாததால் ரூபா அதே பகுதியில் இருக்கும் தன்னுடைய பெற்றோரின் வீட்டில் போய் தங்கி இருக்கிறார்.

இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் விகாசிற்கு ரூபாவின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் விகாஸ் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ரூபாவை கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஆனால் ரூபா இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மனமுடைந்து போன விகாஸ் தன் கையில் இருந்த துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். 

உடனே ரூபா அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளித்திருக்கிறார். தகவலறிந்து வந்த போலீசார் விகாஸ்-ஐ மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர். தற்போது மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். மேலும் போலீசார் விகாஸ் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.