அதிமுக நகரச் செயலாளரின் மகள் காதல் திருமணம்..! ஜோடியை சேர்த்து வைத்த இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்! திருமங்கலம் திகுதிகு..!

பல ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய மகளின் காதல் திருமணத்திற்கு உதவிய இளைஞரை அதிமுக நகர செயலாளர் கொலை செய்துள்ள சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் உள்ள தபால் தந்தி நகரில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. 8 - ஆம் தேதியன்று தோட்டத்திற்கு நண்பர்களுடன் மது அருந்த மணிகண்டன் சென்றுள்ளார். மது அருந்திவிட்டு உணவு வாங்கி வருவதற்காக நண்பர்கள் சென்றுவிட்டனர். மணிகண்டனுடன் சக்திவேல் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவர் மட்டுமே இருந்துள்ளனர்.

நண்பர்கள் திரும்பி வந்து தோட்டத்தில் பார்த்தபோது சக்திவேல் மற்றும் பிரகாஷை காணவில்லை. மணிகண்டன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்ட நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மணிகண்டனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் இந்த கொலையுடன் அதிமுக நகர செயலாளர் விஜயனுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அதாவது சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜயனின் மகன் காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்திற்கு மணிகண்டன் உதவியதாக கூறப்படுகிறது.

அப்போதிலிருந்தே மணிகண்டனை கொலை செய்வதற்கு விஜயன் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்துள்ளார். மேலும் மணிகண்டனை நண்பர்களை மிரட்டியும் விஜயன் பேசிய ஆடியோ ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் பிரகாஷ் மற்றும் சக்திவேல் ஆகியோரை வைத்தே மணிகண்டனை கொலை செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுப்பதற்கு காலம் தாழ்த்தி வருவதாக மணிகண்டனின் நண்பர்கள் குற்றம் கூறுகின்றனர். இந்த சம்பவமானது திருமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.