அமமுக வேட்பாளர்கள் 2 பேர் செக்ஸ் புகாரில் சிக்கியுள்ளதால், அக்கட்சி வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
எம்எல்ஏ ஹாஸ்டலில் செக்ஸ் சேட்டைகள்! கதிர்காமுவை தொடர்ந்து தங்கதமிழ்செல்வன் மீது நர்ஸ் பகீர் புகார்!
நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில், டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தனித்து களமிறங்கியுள்ளது. குறிப்பாக, தேனி மக்களவை தொகுதியில், அக்கட்சியின், நட்சத்திர வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இதேபோல, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில், கதிர்காமு போட்டியிடுகிறார்.
இதில், தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். அவருக்கு, தங்க.தமிழ்ச்செல்வன் கடும் சவாலாக உள்ளார். இந்நிலையில், தங்க.தமிழ்ச்செல்வன் மற்றும் கதிர்காமு மீது பெண் ஒருவர் செக்ஸ் புகார் கூறியுள்ளார். சருத்துப்பட்டியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், இதுதொடர்பாக,தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதற்கு ஆதாரமாக, பலாத்கார வீடியோ ஒன்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார். அந்த வீடியோவில், கதிர்காமு, அந்த பெண்கூட உல்லாசகமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன்பேரில், கதிர்காமு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தவிர, கதிர்காமுவுக்கு ஆதரவாக, தங்க.தமிழ்ச்செல்வன் தலையிட்டு, தன்னை மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த பெண் தற்போது புதிய புகாரை எழுப்பியுள்ளார்.
இதனால், தேனி மாவட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கதிர்காமு தன்னை சென்னையில் உள்ள எம்எல்ஏ ஹாஸ்டலுக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்போது தங்கதமிழ்ச்செல்வன் தன்னிடம் பாலியல் உறவை எதிர்பார்த்ததாகவும் அந்த பெண் அதிரடியாக தெரிவித்துள்ளார்.