அதிசய ஜோதிடச் சிறுவன் அபிக்யா ஆனந்த் வெளியிட்ட அடுத்த அதிர்ச்சி தகவல்..! என்ன தெரியுமா?

கொரனா நோயால் பாதிக்கப்பட்ட மகர ராசிக்காரர்களை கடவுள்தா காப்பாற்ற வேண்டும் என 14 வயது ஜோதிட சிறுவனும் அமெரிக்க வாழ் இந்தியருமான அபிக்யா ஆனந்த் தெரிவித்துள்ளார்.


இதனால் மகர ராசி நேயர்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து அபிக்யா ஆனந்த் தெரிவிக்கையில், மகர ராசி உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மகர ராசி நேயர்கள்தான் கொரனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார் சிறுவன் அபிக்யா ஆனந்த். அதிலும் குறிப்பாக உத்ரானம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகம் பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார் அபிக்யா ஆனந்த்.

கொரனா மட்டுமின்றி வேறு சில நோய்களும் பாதிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் சிறுவன். இந்த பாதிப்பு மே 29 வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கும் அபிக்யா ஆனந்த், சீனாவில் அணுக்கருவிகள் வடகிழக்கு திசையில் இருப்பதால், பல தெருக்களில் வட்டமூளைகள் இருப்பதாலும் அந்த வாஸ்தின்படி நோயை கவர்ந்திழுக்கும் சக்தி அங்கே அதிகம் இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதனால்தான் இந்த நோய்த் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் அபிக்யா ஆனந்த்.

இதனால் மகர ராசி நேயர்கள் பீதியுடன் காணப்படுகின்றனர். தொடர்ந்து கடவுளை வேண்டிக்கொண்டு வருகின்றனர். கொரனா எனும் கொடிய நோய் இந்த உலகத்தில் 2019 நவம்பர் முதல் 2020 வரை ஜூன் வரை ஆட்டிப்படைக்கும் என சில மாதங்களுக்கு முன்னரே கூறியிருந்தவர் அபிக்யா ஆனந்த்