பேப்பர் படித்துக் கொண்டிருந்த அதிமுக எம்எல்ஏ திடீர் மரணம்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுக எம்எல்ஏ காலமானார்


இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் செய்தித்தாள் படித்து கொண்டிருக்கும்போது  திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

69 வயதாகும் இவர் சுல்தான் பேட்டை பகுதி வதம்பச்சேரி பகுதியிலுள்ள அவரது பண்னை வீட்டில் செய்தித்தாள் படிக்கும்போது மயங்கி விழுந்துள்ளார்.. உடனடியாக மருத்துவருக்கு குடும்பத்தார் தகவலளித்துள்ளனர். அவரது வீட்டிற்கு மருத்துவர் வந்து சோதனை செய்ததில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் என்பதை உறுதி செய்தார்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், முன்னதாக மாவட்ட பஞ்சாயத்துக்கள் தலைவராக இருந்துள்ளார்..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்ட போது  அடிக்கடி கட்சி குறித்து எதிர்மறையான கருத்துக்களை பலமுறை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கனகாராஜிக்கு , ரத்தினம் என்ற மனைவியும், சண்முகசுந்தரம் என்ற மகனும், பாமாவிஜயா என்ற மகளும் உள்ளனர். மகன் சண்முகசுந்தரம் அரசியலில் ஈடுபட்டுள்ளார். மகளுக்கு திருமணமாகி விட்டது. இவர் உடன் பிறந்த சகோதிரிகள் இருவர். தந்தை பெயர் ராமசாமி கவுண்டர் , தாய் பொன்னம்மாள்..