சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான அனிருத் மற்றும் தேனிசை தென்றல் தேவா ஆகிய இருவரும் இணைந்து அமைத்துள்ளதாக இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தினா அறிவிப்பு வெளியிட்டு அனிருத்தின் காப்பி சர்ச்சைக்கு முடிவு கட்டியிருக்கிறார்.
ரஜினியின் தர்பார் திரைப்படத்திற்கு இசை அமைத்தது அனிருத் மட்டும் அல்ல.. தேவாவும் கூடவாம்..! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தின் இசையை இளம் இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் தர்பார் திரைப்படத்தில் இடம்பெறும் "கிழி" என்ற பாடல் தேனிசை தென்றல் தேவா அவர்களின் இசையில் வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தில் இடம்பெறும் "தண்ணீர் குடம்" பாடலைப் போல் இருப்பதால் பெரும் சர்ச்சையை.
அதாவது இவ்விரு பாடல்களின் மெட்டுகளும் ஒன்றுபோல் இருப்பதால் இது மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் இசை கலைஞர்கள் சங்க தலைவர் தினா தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் .அந்த அறிவிப்பில் அனிருத் ரவிச்சந்திரனும் இசையமைப்பாளர் தேவாவும் இணைந்து திரைப்படத்தின் இசை அமைத்து இருப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் சுமார் 450 க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பணியாற்றி உள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்து இடம்பெறவில்லை. ஆகையால் அப்போதே இசை கலைஞர்கள் சார்பில் அனிருத்துக்கு கண்டனம் விடுக்கப்பட்டது .
ஆகையால் அவர், என்னுடைய அடுத்த திரைப்படத்தில் நான் நிச்சயம் இசைக்கலைஞர்களை பயன்படுத்துவேன் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தர்பார் திரைப்படத்திலும் அவர் இசைக் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து வெறும் நான்கு இசைக்கலைஞர்களை மட்டும் தான் பணியாற்ற வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதனால் இசைக் கலைஞர்கள் சங்கத்தில் உள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் அவர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படுவதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா கூறியிருக்கிறார்.