கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு நிதி வழங்குவதற்காக ரூபாய் 200 மட்டும் செலுத்தினால் போதும் தன்னுடன் நடனம் ஆடலாம் என்று நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
ரூ.200 கொடுத்தால் உங்களுடன் நம்ம ஸ்ரேயா..! பகிரங்கமாக அறிவிப்பு!
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_20973_1_medium_thumb.jpg)
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு நடிகர்-நடிகைகள் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அந்தவகையில் நடிகை ஸ்ரேயாவும் தன்னுடைய கணவருடன் ஸ்பெயினில் ஊரடங்கு நாட்களை கழித்து வருகிறார். நடிகை ஸ்ரேயா எப்பொழுதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவானது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
சென்னையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றுடன் நடிகை ஸ்ரேயா ஒன்றிணைந்து வைரஸால் பாதிக்கப்பட்டு அவதி படுபவர்களுக்கு நிதி வழங்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். அதாவது கூகுள் பே மூலம் ரூபாய் 200-ஐ இந்த நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். செலுத்திய பின்பு அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து give@thekindnessproject.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பி வைப்பவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடன் யோகா மற்றும் நடனம் ஆகியவைகளை செய்ய உள்ளதாக நடிகை ஸ்ரேயா கூறியிருக்கிறார். நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் 200 ரூபாயை இந்த தொண்டு நிறுவனத்திற்கு செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தப் போட்டியானது சனிக்கிழமை இரவு 8 மணி வரை நடைபெறும் எனவும் இந்த போட்டியின் வெற்றியாளர்கள் வரும் ஞாயிறு அன்று அறிவிக்கப்படுவார்கள் எனவும் நடிகை ஸ்ரேயா அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.