வாழைப்பழத்தைவிட பத்து மடங்கு அதிகமான இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் துரியன் பழத்தில் இருக்கிறது. மேலும் கால்சியம், மாங்கனீஸ், கரோட்டின், கொழுப்பு, இரும்பு, கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் அமிலம் ஆகியவையும் நிரம்பியுள்ளன.
மன அழுத்தத்தில் தவிக்கிறீர்களா… துரியன் பழம் துயரம் தீர்க்குமே
·
இரும்பு மற்றும் போலிக் அமிலம் இருப்பதால் ரத்த சோகையை குறைப்பதில் துரியன் பழம் ஆற்றலுடன் செயலாற்றுகிறது.
·
தயாமின் மற்றும் நியாமின் சத்துக்கள் இருப்பதால் பசியை தூண்டுவதிலும் ஜீரண குளறுபடியை நீக்குவதற்கும் பயன்படுகிறது.
·
படை சொறி சிரங்கு ஆகியவற்றிற்கு துரியன் பழத் தோல் மருந்தாக பயன்படுகிறது.
·
துரியன் பழம் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்தம் கட்டுப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.