த்ரில்லிங்கான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடந்தது. த்ரில்லிங்கான இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி மற்றொரு தொடக்கவீரரான லோகேஷ் ராகுலுடன் இணைந்தார்.இந்த ஜோடி இரண்டாம் விக்கெட்டிற்கு 55 ரன்களை சேர்த்தது. கோஹ்லி 24 ரன்களுக்கும், லோகேஷ் ராகுல் 50 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடியதால் இந்திய அணியால் கடைசி பத்து ஓவர்களில் ரன்களை சேர்க்க முடியாமல் திணறினர் .இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை மட்டுமே எடுத்தது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் முதல் இரண்டு விக்கெட்களை இந்திய அணி சுலபமாக எடுத்தது. பின்னர் களமிறங்கிய மாக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 56 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழந்ததும் இந்திய அணி பவுலர்கள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை திணற செய்தனர். 19 வது ஓவரை வீசிய பும்ரா 2 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தை பரபரப்பாக்கினார்.

எனினும் கடைசி ஓவரை வீசிய உமேஷ் யாதவ் வெற்றிக்கு தேவையான 14 ரன்களை ரன்களை அள்ளிக்கொடுத்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை வீணடித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.