பாஜக எம்பி சுரேஷ் பிரபு அவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று அச்சத்தால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாஜக எம்.பி..!
உலகையே அச்சுறுத்தி வரும் மிகப்பெரிய ஒன்றாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது தற்போது நம் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றினால் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து இந்திய அரசாங்கம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. அதுமட்டுமல்லாமல் ஷாப்பிங் மால்கள் திரையரங்கங்கள் பள்ளி கல்லூரிகளில் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி நடைபெற்ற ஷெர்பாஸ் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக எம்.பி சுரேஷ் பிரபு, சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்தார். கூட்டம் முடிவடைந்த நிலையில் நாடு திரும்பிய அவர் தனக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தன் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். அதாவது அடுத்து வரும் 14 நாட்களுக்கு அவர் தனிமையில் இருக்க போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.