அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டிருந்தால் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி இருக்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல! அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய அவர் பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு பதில் அளித்தார். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அரசு உண்மையாகவும் நேர்மையாகவும் நடத்தி வைத்ததாக அவர் கூறியிருந்தார். மேலும் நாங்கள் குறுக்கு வழியில் வெற்றி பெற்றோம் என்ற கருத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டம் மற்றும் விதிகளின்படி தான் தேர்தல் ஆணையம் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. ஆனால் ஸ்டாலின் தொடர்ச்சியாக அதிமுக கட்சியின் மீது தவறான பிம்பத்தை தோற்று வைக்க முயற்சித்து வருகிறார். அது ஒருபோதும் நடைபெறாது என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர், வரும் 2021ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக பாஜகவை சேர்ந்த பொன்ராதாகிருஷ்ணன் பாஜக கட்சி, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி இருந்தால் அதிக இடங்களை கைப்பற்றி இருக்கும் என்று கூறியிருந்தார். பத்திரிகையாளர் ஒருவர் பொன்ராதாகிருஷ்ணன் கூட்டணி குறித்து கூறியதற்கு உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், பொன்ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல என்று கூறினார்.