பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியானது நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பிக்பாஸ் 3 டைட்டிலை அடித்து தூக்கிய முகேன் ராவ் காதலி சொன்ன முக்கிய தகவல்! என்ன தெரியுமா?
இந்நிகழ்ச்சியில் வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகேன் பங்கேற்றபோது தன்னுடைய காதல் கதையைப் பற்றியும் பல இடங்களில் கூறியிருந்தார். இவருடைய காதல் கதையானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.
முகன் இதற்கு முன்பாக நதியா என்பவரிடம் தன்னுடைய காதலைப் பற்றி கூறியுள்ளதாக அறிவித்திருந்தார் . மேலும் அவரது பதிலுக்காக தான் காத்திருப்பதாகவும் கூறினார்.
மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் எனுமிடத்தில் இருப்பவர் நடிகை யாஸ்மின் நதியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளர் முகேன் மற்றும் நதியா ஆகிய இருவரும் இணைந்து மலேசிய திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தனர். இதற்குப் பின்பு இருவரும் நண்பர்களாக பழகி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற பிக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக முகேன் தேர்வு செய்யப்பட்டுள்ளது ஒட்டி அவருக்கு வாழ்த்து செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் முகேனின் காதலி நதியா. தற்போது இந்த புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.