நீங்க சொல்ற ரேட் கட்டுப்பிடியாகாது..! விலை போகாத பிகில்..! அதிர்ச்சியில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் திரைப்படமானது வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் என்ற நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் வினியோகத்தை தயாரிப்பாளர் துவங்கியுள்ளார்.


அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில் .இந்த படத்தில் இசையை ஏ .ஆர் .ரகுமான் அமைத்துள்ளார் . இந்த திரைப்படத்தை AGS நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார். திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் பிகில் திரைப்படத்தின் டிரைலர் வரும் 12ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து திரைப்படத்தின் வெளியீடு வரும் தீபாவளியன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் வினியோகத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி துவங்கியுள்ளார். 

அந்த வகையில் பிகில் திரைப்படத்தை கேரளாவில் விற்பனை செய்ய முயற்சித்த போது மிகக் குறைந்த விலையில் படத்தை கேட்டதால் தர மறுத்துவிட்டார் அர்ச்சனா கல்பாத்தி. இந்த விலை எல்லாம் எங்களுக்கு கட்டுப்படி ஆகாது என்று கூறி தர மறுத்து விட்டாராம் பிகில் திரைப்படத்தை அர்ச்சனா. அர்ச்சனா சொன்ன விலைக்கு திரைப்படத்தை வாங்குவதற்கு கேரளாவை சேர்ந்த எந்த விநியோகஸ்தரும் முன் வரவில்லையாம். இந்த சம்பவம் தயாரிப்பாளருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.