குடும்பத்தினர் கொரோனாவினால் பாதிக்கப்படிருந்த நிலையில், உயிரிழந்த பிராமணர் ஒருவரின் உடலுக்கு கொரோனா அச்சத்தால் இறுதிசடங்கு செய்ய யாரும் முன்வராத நிலையில், அந்த உடலை கண்ணியமான முறையில் சுடுகாடு வரை சுமந்து சென்று தகன மேடையில் வைத்து இறுதி சடங்கு செய்ய உதவிய முஸ்லிம்கள்
கொரோனாவால் பலியான பிராமணர்! அருகே கூட வர மறுத்த உறவுகள்! ஆனால் கண்ணியமாக அடக்கம் செய்த முஸ்லீம்கள்! நெகிழ்ச்சி சம்பவம்!
23.06.2020 அன்று காலை விழுப்புரம் மாவட்டம் பெரம்பை பகுதியில் உயிரிழந்த பிராமணரின் உடலுக்கு, அவரின் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்டிருந்ததால், கொரோனா அச்சம் காரணமாக இறுதி சடங்கு செய்ய யாரும் முன்வராத நிலையில் கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை ஆய்வாளர் திரு.ரவி அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் பகுதி தலைவர் A.அஹமது அலி அவர்களிடம் அந்த உடலுக்கு இறுதி சடங்கு செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் SDPI கட்சியின் தன்னார்வலர்கள் உடன் சென்று, உரிய முறையில் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) அணிந்து, இறந்த அந்த பிராமணரின் உடலை அவரது வீட்டிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று, பின் கண்ணியமான முறையில் தகன மேடை வரை சுமந்து சென்று இறுதி சடங்கு செய்ய உதவினர்.
தமிழக பகுதியான பெரம்பை புதுச்சேரிக்கு மிக அருகில் இருப்பதால், புதுச்சேரி பகுதியைச் சார்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI கட்சியின் தன்னார்வலர்கள் இணைந்து இந்த சேவையை செய்தனர்.