அண்ணனை காதலித்து திருமணம் செய்த தங்கை..! திருப்பத்தூர் அதிர்ச்சி!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அண்ணன் தங்கை இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிகழ்ந்துள்ளது.


திருப்பத்தூர் மாவட்டத்தில் நாற்றம்பள்ளி என்ற இடத்தை அடுத்து அன்சாகரம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். சம்பத்திற்கு, ரத்தினகுமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் வசித்து வரும் அதே பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவரது மகள் பெயர் பிரீத்தா. சம்பத் குடும்பமும் சண்முகம் குடும்பமும் உறவினர்கள் ஆவர். இதன்மூலம் ரத்தினகுமாரும் பிரீத்தாவும் அண்ணன் தங்கை உறவை கொண்டவர்கள் ஆவர்.

ரத்தினகுமாரும் பிரீத்தாவும் சிறுவயது முதலே அண்ணன் தங்கை உறவை தாண்டி மிகவும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. பொதுவாகவே எல்லா காதல் ஜோடிகளுக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனை அவர்களது வாழ்க்கையிலும் எழ தொடங்கியது. அண்ணன் தங்கை உறவை கொண்ட இவர்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று உறவினர்கள் தடுத்துள்ளனர். இவர்களது காதலை கைவிடுமாறு வற்புறுத்தி இருக்கின்றனர்.

இதற்கு ஒப்புக் கொள்ளாத இருவரும் ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து திருமணமும் செய்து கொண்டிருக்கின்றனர். வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பிற்காக அருகில் இருந்த காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நடந்த சம்பவத்தை பற்றி அறிந்து கொண்ட போலீசார் இருவரது குடும்பத்தையும் அழைத்து வார்த்தை நடத்தி சமாதானம் செய்துள்ளனர். அண்ணன் தங்கை உறவு முறையில் இருக்கும் இருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.